வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து இரு மாணவர்கள் பலி
வவுனியா பம்பைமடு கல்குவாறியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இன்று மதியமளவில் பம்பைமடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல் உடைக்கும் குவாறி காணப்பட்டிருந்தது.
எனினும் குறித்த கிடங்கு மூடப்படாமையால் நீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அவதானித்த 15 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் இருவரது சடலங்களையும் மீட்கும் பணி இடம்பெற்று வருவதுடன் பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.