சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சிலி செலுத்தினர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சிறிலங்கா பிரதமருடன் சென்றிருந்த இந்தியப் பிரதமர், அங்கு இறந்தவர்களின் நினைவாக மலர் செண்டு ஒன்றை வைத்து வணங்கினார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் மோடி, சிறிலங்கா மீண்டும் எழுச்சி பெறும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.

தீவிரவாதத்தின் பயங்கர செயல்களினால், சிறிலங்காவின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது, சிறிலங்கா மக்களுடன், இந்தியா , ஒற்றுமையாக நிற்கிறது” என்றும் அவர் கூறினார்.

St-Anthony-s-Church-modi-4St-Anthony-s-Church-modi-3St-Anthony-s-Church-modi-4-1St-Anthony-s-Church-modi-5

Share.
Leave A Reply