அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனது காதலியை வாகனத்திலிருந்து இறக்கிய பின், திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோன் ஹார்ட் என்பவரே இந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். இவர், ஜோர்ஜியாவின் டெகால்ப் நகர பொலிஸில் பணியாற்றுபவர்.

தனது காதலி அலெக்ஸிஸை வித்தியாசமான முறையில் திருமண ப்ரபோஸ் செய்வதற்கு ஜோன் ஹார்ட் விரும்பினார்.

இதற்காக லோரன்ஸ்விலே நகர பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இவர்கள் வகுத்த திட்டத்தின்படி. அலெக்ஸிஸ் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அவ்வாகனத்தை அலெக்ஸிஸ் நண்பி ஒருவர் செலுத்திக்கொண்டிருந்தார். அவருக்குத் இத்திட்டம் தெரிந்திருந்தது,

பொலிஸார் வாகனத்தை நிறுத்தி, இருவரையும் வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறினர்.

Lovers

அதன்பின். அலெக்ஸிஸ் முன் முழந்தாளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஜோன் ஹார்ட் திருமணம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார்.

அந்த ப்ரபோஸை இன்ப அதிர்ச்சியுடன் அலெக்ஸிஸ். ஏற்றுக்கொண்டார் என உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply