வவுனியா, பம்பைமடுவில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பம்பைமடு இராணுவ முகாமுக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல்லுடைக்கும் குவாரி காணப்பட்டிருந்தது.எனினும், குறித்த நீர்த்தேக்க கிடங்கு மூடப்படாமையால் அதில் நீர் தேங்கியிருந்துள்ளது.
இதனை அவதானித்த 15 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் அதில் குளிப்பதற்காக இறங்கியதில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இது குறித்து பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.