அமெரிக்காவில் பெண் ஒருவரின் வீட்டின்முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரின் அருகே பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமான ‘டாபி’ உருவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது.

ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரவ்லிங் என்பவரால் எழுதப்பட்டது. இதனை பின்னர் பல்வேறு பாகங்களாக ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே உலகம் முழுவதும் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்க கூடியதாகும்.

இதில் ஏலியன் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட ‘டாபி’ எனப்படும் கதாபாத்திரம் வெகுவாக கவர்ந்தது.

இந்த ‘டாபி’ கதாபாத்திரம் உண்மையாகவே உள்ளதா? எனும் சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு அமெரிக்காவில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் விவின் கோம்ஸ். இவர் தனது முகநூல் பக்கத்தில் வீட்டின் சிசிடிவி காட்சி ஒன்றை சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை குறிப்பிட்டு ‘ஜே பீ’ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விவின் ஒரு நாள் காலை தனது வீட்டின் சிசிடிவி கேமிரா காட்சிகளை வழக்கம் போல செக் செய்து பார்த்தார். அப்போது நள்ளிரவில் ‘டாபி’ போன்ற உருவம் நடமாடுவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிடவே, படுவைரலாக சென்றுள்ளது. இதனை கண்டு பல்வேறு நாட்டு நெட்டிசன்களும் கோடிக்கணக்கில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோவை 3 கோடிக்கும் மேற்பட்டோர் இதுவரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply