அக்கரைப்பற்று பதுர் பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான இராணுவ வீரர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று இராணுவ முகாமில் கடமையாற்றும் ஆர்.எம்.ஜகன் ரத்னாயக்கா (34) என்ற இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவரை அம்பாறை பதியத்தலாவ பிரதேசத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றில் வைத்து கைது செய்ததாகவும் இவரிடமி ருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 17 பவுண்களும் 1 இலட்சத்து 95 ஆயிரத்து 610 ரூபா பணமும்,வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் டி.வி.ஆர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது கைத்தொலைபேசியும், இராணுவ வீரருக்கான அடையாள அட்டையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (11) கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் கைப்பற்றப்பட்டதுடன் கண்டி வத்தேக பிரதேசத்தில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்ற பதர் பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு கடந்த 9ஆம் திகதி மாலை புலனாய்வு பரிவினர் என தெரிவித்து சோதனை செய்வதற்கு வந்திருக்கிறோம் என தெரிவித்து பணம்.நகை என்பன கொள்ளையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.