குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டு,அந்த வீடியோவை கணவனுக்கு அனுப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.சிங்கப்பூரில் வேலை செய்துவரும் இவருக்கு, அனிதா என்ற மனைவியும்,அனிரூத்,மோனிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவர் சிங்கப்பூரில் இருப்பதால் அவர்கள் கிராமத்தில் இருக்கும் வீட்டில் குழந்தைகளுடன் அனிதா வசித்து வந்தார்.

இதனிடையே கணவனும் மனைவியும் தினமும் செல்போனில் பேசி கொள்வது வழக்கம்.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்குள்ளும் தொடர்ந்து பிரச்னை நிலவி வந்தது.

இதனால் செல்போனில் பேசும் போது இருவரும் கடுமையாக சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரச்சனை தீவிரமடைந்ததையடுத்து, மனமுடைந்த அனிதா வயலிற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

அதோடு தான் விஷம் குடிப்பதை வீடியோவாக எடுத்து, தனது கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

இதனிடையே விஷம் குடித்ததால் மயக்கமடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்:>> வீடியோ: https://tamil.news18.com/videos/tamil-n

Share.
Leave A Reply