வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதற்காக பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கொடிகெஹள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மா. இவர் ஹோட்டல் நடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள சிலரிடம் கடனாக ரூ.50,000 பெற்றுள்ளார். ஆனால் ஹோட்டலில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் சரியாக நடைபெறாததால் பெரும் நஷ்டத்துகு உள்ளாகியுள்ளார்.

இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்க ஆரம்பித்ததால் ராஜம்மா சில நாட்களக தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தர்மசாலா என்னுமிடத்தில் இருந்த ராஜம்மாவை வழுக்கட்டாயமாக அழைத்து வந்த கடன் கொடுத்தவர்கள், மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜம்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், இதில் ஈடுப்பட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பலரை போலிஸார் தேடி வருகின்றனர்.

கடனுக்காக பெண் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply