நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷே பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த ஆறு பெண்கள் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

62487223_2308814729371770_3896513108251770880_oஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பக்தர்களின் நெரிசல் அதிகமாக காணப்பட்டத்தை வாய்ப்பாக பயன்படுத்தி உட்புகுந்த ஆறு சந்தேகத்திற்கு இடமான பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை போல் நடித்து, வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏனைய பெண்ணுடைய தங்க சங்கிலியை அறுத்துள்ளனர்.

Photo__4_

இதனை அறிந்த குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதோடு, அறுக்கபட்ட தங்க சங்கிலியையும் நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மொத்தம் 06 பெண்கள் கைது செய்யபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

kupavisesam

இந்த ஆறு பெண்களும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு குழுவாக சென்று பக்த அடியாரிகளின் தங்க சங்கிலிகளை களவாடும் சம்பவத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும்,மேற்படி இந்த ஆறு பெண்களும் வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம ஆகிய பகுதிகளை சேர்நதவர்கள் எனவும் இந்த ஆறு பெண்களும் 23 தொடக்கம் 28 வரையான வயதினை மதிக்கத்தக்கவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

64141643_2308814756038434_8216000647422541824_oஇச்சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட ஆறு பெண்களும் 15.06.2019 அன்று நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Share.
Leave A Reply