இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே இவ்வாறு இடிமின்னல் தாக்கத்தில் பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த இடிமின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
இவ்வேளையில் மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி – பெரியவெட்டை எனும் வயற் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த விவசாயி இடிமின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.
மரணித்தவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.