மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(17) காலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியான சந்திரசேகரம் மீரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த மாணவி தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply