இந்தியாவில் வயிற்று வலிக்காக வந்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இருந்த பொருட்களைக் கண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உடைப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலி காரணமாக அருகிலிருக்கும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள தயாரான வைத்தியர்கள், முதலில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதன் படி ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த வைத்தியர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் வயிற்றின் உள்ளே சிறிய இரும்புத்தகடு இருப்பது போன்றும், சில துண்டுகள் இருப்பது போன்றும் இருந்துள்ளது.
அதன் பின் உடனடியாக அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 90 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் அவருடைய வயிற்றில் இருந்து சுமார் 80 பொருட்கள், அதாவது, சாவிகள், நாணயங்கள் மற்றும் புகைப்பிடிக்க பயன்படும் சில்லம் போன்றவை இருந்துள்ளன.
இது குறித்து வைத்தியர்கள் கூறுகையில், அவருடைய உறவினர்கள் தொடர் வயிற்று வலியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்தனர்.
மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று விசாரித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.