வாழ்க்கையில் மதிப்புமிக்க அனுபவங்கள் பல உண்டு. அதில் ஒன்று நல்ல தகப்பனாக இருப்பது.
பெரிய பொறுப்புகளையும் தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் வெளியே தெரிவதில்லை.
குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு.
அப்பா. இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் அன்பு கடமை, தைரியம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. வளரும் பிள்ளைகளுக்கு தந்தைகளின் தேவை மிக மிக அவசியம்.
குடும்ப சூழ் நிலை காரணமாக வெளிநாடுகளில் வேலைக்கு சென்று குடும்பத்தினை பிரிந்து அவர்கள் படும் இன்னல்களை வரிகளில் கூறி விட முடியாது. இந்த காட்சி அதற்கு சான்று.