மேயாத மான் புகழ் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆடை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலா பால் ஆடை இன்றி வரும் டீசர் இன்று வெளியானது.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் அமலா பால் எப்படி இது போன்று படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.

அதோடு, கேமரா முன்பு எப்படி ஆடை இல்லாமல் இருக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தையே பலரும் டீசரில் எடுத்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், இப்படியொரு டீசர் தேவையா என்பது தான் விமர்சனம்.

இதற்கு முன்னதாக அமலா பால் நடிப்பில் வந்த படங்களிலும் இது போன்று அவர் படு மோசமாக நடித்ததில்லை.

ஆனால், கிளாமராக வேண்டுமென்றால் நடித்திருக்கிறார். ஆடை படத்தில் நடித்ததன் மூலம் பலரது விமர்சத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் படம் வெளிவரும் போது கண்டிப்பாக அமலா பால் இந்த காட்சி நீக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, அதோ அந்த பறவை போல படம் தமிழிலும், 3 மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

மொத்தம் 5 படங்களுமே இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Master-4-768x852

சரி, அந்த டீசரில் என்ன தான் சொல்லியிருக்காங்க. வெறும் 1.43 நிமிடம் ஓடக்கூடிய அந்த டீசரில் பெண்ணை காணவில்லை என்ற தவிப்பில் காவல் நிலையம் வந்த தாயிடம் கூட ஒரு நாள் தேட வேண்டியது தானே என்று கேட்கும் காவல் அதிகாரியோடு டீசர் தொடங்குகிறது.

தொடர்ந்து சுதந்திரம் என்பது மற்றவர்கள் உனக்கு என்ன செய்தார்களோ அதை நீ அவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதில் இருக்கிறது என்று பிரெஞ்சு தத்துவஞானி ஜான் பால் சார்ட்ரேயின் தத்துவதோடு டீசர் நகர்கிறது.

பல அடுக்குமாடி கட்டிடத்திற்குள் போலீஸ் ஜீப் நுழைகிறது. இதையடுத்துஇ பின்னணியில் பாடல் கேட்கிறது.

அப்படியே போலீஸ் அந்த கட்டிடத்திற்குள் நுழைகிறார்கள். அங்கு அமலா பால் முழு நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அச்சப்படுகிறார்.

அதன் பிறகு தனது மானத்தை மறைக்க போராடுகிறார். அப்படியே டீசர் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன், எதற்காக இவ்வாறு நடித்துள்ளார் என்பது படம் வெளியான பிறகு தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதற்கான படப்பிடிப்பும் பழனியில் பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Share.
Leave A Reply