கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை ஆபத்தாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய பின்னரே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சீனி குறைந்து வருவதாகவும் இந்நிலை தொடர்ந்தால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் உடனடியாக வைத்தியாசாலையில் அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கு உண்ணிவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிராதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை இன்றைய தினம் நிறைவேற்றப்படுமென ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.