ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியான கேன் தனகா தனது 117 ஆவது பிறந்த நாளை ஜனவரி 02 ஆம் திகதி கொண்டாடியுள்ளார்.
தெற்கு ஜப்பானில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தனது பிறந்த நாளை வைத்தியசாலையில் கொண்டாடியுள்ளார்.
இவர் உலகின் மிகவும் வயதான பெண்மணியாக கடந்த ஆண்டு 116 வருடங்கள் 66 நாட்கள் நிறைவடைந்திருந்த நிலையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
திருமதி தனகா 1903 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அத்துடன் 1922 இல் ஹீடியோ தனகாவை மணந்தார் என்று கின்னஸ் உலக சாதனை தகவல்கள் தெரிவிக்கின்றன.