வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ரயில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த ராஜன் வயது 35 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்.
குறித்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் சில மணி நேர தாமதத்தின் பின்னரே ரயில் தனது பயணத்தை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.