ரஷியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த 3 பன்றிகள் அங்கிருந்த மது பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு உடைத்து, தரையில் சிந்திய மதுவை குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கண்டிருப்போம். அது உண்மை என்றாலும் பலர் அதை பொருட்படுத்துவது இல்லை. பண்டிகைக் காலங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இந்நிலையில், மது இருக்கும் இடத்தை பன்றிகள் மோப்பம் பிடித்து அவற்றை அருந்திய வினோத சம்பவம் ரஷியாவில் நிகழ்ந்துள்ளது.

ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ளது டையுமன் நகரம். சம்பவத்தன்று இந்நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்குள் 3 பன்றிகள் நுழைந்தன. ஆனால் அங்கிருந்தவர்கள், பன்றிகள் என்ன செய்கின்றன என்பதை காண்பதற்காக அவற்றை விரட்டாமல் வீடியோ எடுத்தனர்.

பலசரக்கு பொருட்கள் இருந்த ஒவ்வொரு அடுக்காக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்ற பன்றிகள் மதுபாட்டில்கள் இருந்த அடுக்குகளை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு உடைத்தன. பின்னர் தரையில் சிந்திய மதுவை குடிக்க தொடங்கின. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply