195 வாலிபர்களை இரையாக்கிய உலகின் மிக மோசமான சீரியல் ஓரின பாலியல் குற்றவாளி ஒருவருக்கு 30 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

மான்செஸ்டர், இந்தோனேசியாவை சேர்ந்த ரெய்ன்ஹார்ட் சினாகா என்ற பிஎச்டி படித்த நபர் உலகின் மிக மோசமான சீரியல் பாலியல் வன்முறையாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா குறைந்தது 195 வாலிபர்களை தனது இரையாக்கி உள்ளார். உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று போலீசார் ஒப்புக்கொள்கிறார்கள். அவரை 30 ஆண்டுகள் சிறையில் அடைத்த நீதிபதி அவரை ‘அசுரன்’ என்று அழைத்தார்.

202001071629455227_WORLDS-WORST-RAPIST-JAILED_SECVPF.gif

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பெரும்பாலும் ஒரு பாலின மாணவர்களை குறிவைத்து உள்ளார் சினாகா.

136 கற்பழிப்புகள், எட்டு கற்பழிப்பு முயற்சிகள் மற்றும் 48 பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக 15 அநாகரீகமான தாக்குதல்கள் உட்பட 159 வழக்குகளில் தண்டனை பெற்று உள்ளார்.

சினாகா 195 வெவ்வேறு ஆண்களைத் தாக்கியதாக வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவர்களில் வீடியோவில் உள்ளவர்களில் 70 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரே என அழைக்கப்படும் சினாகா 2007-ல் 24 வயதாக இருந்தபோது மாணவராக இங்கிலாந்துக்கு வந்தார். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் திட்டமிடலில் முதுகலைப் படிப்பை முடித்து உள்ளார்.

பின்னர் அதே பல்கலைகழகத்தில் சமூகவியலில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார்.

இதன் பின்னர் அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் புவியியலில் பிஎச்டி படிப்புக்கு சேர்ந்தார். ‘பாலியல் மற்றும் அன்றாட நாடு கடந்த விதம்’ என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையின் மேற்பார்வைகளுக்காக தவறாமல் அவர் மான்செஸ்டரில் தெற்காசிய ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் இருபால் ஆண்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்று வந்தார்.

2017-ல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து லீட்ஸ் பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்தது, மேலும் 2018-ம் ஆண்டில் அவரது முதல் வழக்கு விசாரணைக்கு பின்னர் அவரை வெளியேற்றியது.

ரெய்ன்ஹார்ட் சினாகா மான்செஸ்டரின் ஓரின சேர்க்கை கிராமத்திற்கு அருகில் ஒரு மோசமான பிளாட்டில் வசித்து வந்தார்.

ஆனால் இந்தோனேசியாவில் தனது பணக்கார குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கை முறையை கடைபிடித்து வந்தார். தொழில் அதிபரான அவரது தந்தை அனுப்பும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

சினாகா ஓரின சேர்க்கையாளர் என்று தெரியாத அவரது பெற்றோர்கள் அவர் திருமணம் செய்துகொண்டு இந்தோனேசியாவிலேயே குடியேற வேண்டும் என்று விரும்பினர்.

ஆனால் சினாகா அங்கு திரும்ப தயங்கினார். இந்தோனேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு உள்ளது மற்றும் சில மாநிலங்களில் சட்டவிரோதமானது.

இதுகுறித்து சினாகாவின் நண்பர் ஒருவர் கூறும்போது, சினாகாவின் தந்தை மிகவும் பணக்காரர். அவர்களுக்கு ஜகார்த்தாவின் மையத்தில் ஒரு மாளிகை உள்ளது.

சொந்த ஊருக்கு செல்லும் போது மட்டும் சினாகா மிகவும் நல்லவர் போல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று கூறினார்.
Share.
Leave A Reply