வத்திக்கானில், தன்னிடம் முத்தம் கேட்ட கன்னியாஸ்திரிக்கு, பாப்பரசர் பிரான்சிஸ் முத்தம் கொடுத்தார். ஆனால், கடித்துவிடாதீர்கள் என பாப்பரசர் வேடிக்கையாக அளித்த பதில் அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பலை யை உருவாக்கியது.
பாப்பரசர் பிரான்சிஸ், வத்திக்கானில் வாரம் தோறும் தன்னை பார்க்க வருபவர்களை சந்திப்பார். நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த சந்திப்பின்போது, அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் ‘ஒரு முத்தம் கிடைக்குமா?’ எனக் கேட்டார்.
அவரின் கோரிக்கைக்கு பதிலளித்த பாப்பரசர் பிரான்சிஸ், நான் முத்தம் தருவேன், ஆனால், நீங்கள்அமைதியாக இருக்க வேண்டும், கடித்து விடக் கூடாது என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.
கன்னியாஸ்திரி உறுதியளித்ததை அடுத்து அவரது கன்னத்தில் பாப்பரசர் முத்தமிட்டார். இதனால் அந்த கன்னியாஸ்திரி மகிழ்ச்சியடைந்தவராக காணப்பட்டார்.
வத்திக்கானில் செயின்ற் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேகமாக இழுத்தார்.
இதனால் பொறுமை இழந்த போப் அவரது கையை வேகமாக தட்டிவிட்டார்.இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ: