சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இருவரின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து 287 பயணிகளுடன் இந்தோனேசியாவின் ஜுவாண்டா நோக்கி பயணித்து கொண்டிருந்த விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

லயன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான (JT-085 A330) குறித்த விமானம் இலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள் மயக்கமடைந்துள்ளனர், இதனையடுத்து விமானி விமானத்தை தரையிறங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனுமதி கோரியுள்ளார்.

99423_1577065581அனுமதி கிடத்ததையடுத்து, விமானம் இன்று (13)அதிகாலை 2.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதன் போது மயக்கமடைந்த பயணிகளை பரிசோதனை செய்த விமான நிலைய மருத்துவர்கள் இரு பயணிகளும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் இந்தோனேசியவை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும் 64 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலை 7.40 மணியளவில் விமானத்திலிருந்து அகற்றப்பட்டு நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த விமானத்தின் உட்புறம் சுத்தம் செய்யப்பட்டு, எரிபொருள் நிறப்பப்பட்டு, காலை 8.13 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு பணயத்தை தொடர்ந்துள்ளது.

Share.
Leave A Reply