தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் அனைவரும் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொட்ருகளை கொள்வனவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.