கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டு அறிக்கையி ல் தெரிவித்துள்ளது.

இலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் ஒரு பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

064470adabb5b5096afcc33f12d0b049புதிய ஜனாதிபதி கடந்த கால துஸ்பிரயோகங்களை துடைத்தெறியும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார் என மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற துஸ்பிரயோகங்களிற்கு தீர்வை காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதிகளை மதிக்கப்போவதில்லை என்பதை இந்த புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply