`

தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தௌஃபீக், சமீம்

கேரள எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு குறித்து தமிழக, கேரள போலீஸார் கூட்டாக விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு உதவியாக பலர் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த வழக்கு சமந்தமாக கேரளத்தில் நெய்யாற்றின்கரை, தென்மலை பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சநறளயய
சிசிடிவி காட்சிகள்

கடந்த திங்கள்கிழமை பெங்களூர் ராமநகரியில் இஜாஸ் பாஷா கைது செய்யப்பட்டதுதான் குற்றவாளிகளை பிடிக்க துருப்புச்சீட்டாக அமைந்தது என்கிறது போலீஸ் வட்டாரம்.

டாக்ஸி டிரைவரான இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து கொண்டு வந்த துப்பாக்கியை பெங்களூரில் வைத்து தெளஃபீக்கிடம் கொடுத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் குற்றவாளிகள் பயணம் செய்வதாக இஜாஸ் பாஷா தகவல் கொடுத்தார்.

அதன்படி கர்நாடகா போலீஸ், தமிழ்நாடு கியூ பிரிவு போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் சேர்ந்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளது.

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தங்களுக்கு உதவி இரண்டுபேர் குறித்து தெள்ஃபீக் தெரிவித்திருக்கிறார். அவர்களை பிடிக்க இப்போது தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

இதற்கிடையில் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் தமிழக கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மற்றும் டெல்லியை மையமாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டுள்ளனர்.

அல் உம்மா பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற பெயரில் இவர்கள் இயங்கியுள்ளனர்.

சென்னையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

எனவே போலீஸ் கைது செய்யாமல் இருக்கவும், போலீஸுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும் தங்கள் இருப்பிடத்தை கர்நாடகாவிற்கு மாற்றியுள்ளனர். அங்கு தீவிரவாத திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர்.

சநறயளளள
அப்துல் சமீம் – தவுபீக்

கர்நாடகாவில் பல இடங்களில் பிரிந்து வசித்தவர்கள் தங்கள் பெயர்களையும், உருவத்தையும் இடத்துக்கு ஏற்றார்போல் மாற்றியுள்ளனர். தேவைப்படும் சமயத்தில் அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவதும் வழக்கம்.

அல் உம்மா பயங்கரவாத கொள்கை மற்றும் கருத்துக்களை எடுத்துச் சொல்லி தங்கள் புதிய இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.

நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் உள்ளிட்டவர்கள் டெல்லியில் சந்தித்து தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

17 பேர் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் மூன்றுபேர் தற்கொலைபடை தாக்குதல் பயிற்சி பெற்றவர்கள் எனவும் தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்கள்.

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை தமிழகம் மற்றும் கேரளத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் இரண்டுபேரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சநறயளளளததத

தௌஃபீக், சமீம்

Share.
Leave A Reply