நித்தியானந்தாவின் பிடியில் இருக்கும் மா நித்திய தத்வ பிரியானந்தா மரண பயம் கலந்த குரலில் வெளியிட்ட வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்னு தெரியாது? அந்த மாதிரி சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக் கோம். அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு… எனக்கு அந்த அளவுக்கு பயமா இருக்கு…’ என கதறிய மகளின் குரலை கேட்டு அப்பா ஜனார்த்தன சர்மா உடைந்து போனார்.

275_0

அந்த வீடியோ நள்ளிரவு வெளியானது. அதில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்னைத் தூங்க விடவில்லை. இரவு முழுவதும் அழுதேன்.

உடனடியாக எனது மகள் கடத்தப்பட்ட குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மறுநாள் காலை சென்றேன்.

அந்த வீடியோவையும் அதில் எனது மகள் உயிர் பயத்துடன் கதறியதையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தேன்.

அந்த நீதிமன்ற உத்தரவுப்படி எனது மகளை தேடி வரும் குஜராத் மாநில போலீசாரிடம் சென்று வீடியோவை காண்பித்தேன்.

அவர்கள் அதிர்ந்து போனார்கள். மரண பயத்துடன் எனது மகள் பேசிய பேச்சுக்கு என்ன எதிர்வினை செய்ய முடியும் என ஆலோசித்தார்கள்.

அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் “நித்தி ஆசிரமத்தில் நடப்பது என்ன’ என்று 164 சட்ட பிரிவுப்படி வாக்குமூலம் வாங்கினார்கள்.

அதில் “நித்தியும் ரஞ்சிதாவும் இணைந்து காட்சி தந்த வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில் நடக்கின்றன.

குருகுலப் பள்ளி என நித்தி நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு நித்தி மனநோய் முற்றிய ஒரு கிரிமினல் என ஆதாரத்துடன் விளக்கினேன். அவர் எந்த மோசமான நடவடிக்கையும் செய்வார்.

276_0

பல கொலைகளை செய்தவர் என்றேன். அடுத்த நாளே இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மையான வீடியோ. அதில் பேசிய என் மகளின் பேச்சு உண்மையானது.

ஒரு தகப்பனான எனக்கு எனது மகளின் முக பாவங்கள் நன்றாக தெரியும். இந்த வீடியோ பற்றி நக்கீரனில் செய்தி வெளிவந்தவுடன் எனது மகள் பேசியதாக மற்றொரு வீடியோ அவளது முகநூல் பக்கத்தில் வெளியானது.

அதில் “உயிருக்கு ஆபத்து’ என அவள் பேசி வெளிவந்த வீடியோ முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய வீடியோ என சொன்னார்.

277_0

எனது மகள் உயிருக்கு ஆபத்தில்லை என சந்தோஷப்படுவதா? முன்பு பேசிய “உயிருக்கு ஆபத்து’ என்கிற வீடியோவில் எந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசினார் என கண்டுபிடிப்பதா? என்று குழம்பிப் போனேன்.

உயிருக்கு ஆபத்து என சாதாரணமாக யாரும் பேச மாட்டார்கள். முன்பொரு சந்தர்ப்பத்தில் என் மகள் பேசினாள் என வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் பதினான்கு வயதிலிருந்து நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு முன்பு உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்குமானால் அதுவும் தவறு தானே என என் மனம் யோசித்தது.

அவர் ஒரு மோசமான கிரிமினல். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார். அவருக்கு எதிரான போராட்டத்தை எனது குழந்தைகளை காப்பாற்றத்தான் நான் தொடங்கினேன்.
இன்று அது நித்தியின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய செய்யும் போராட்டமாக மாறிவிட்டது. அதனால் அதற்குக் காரணமான என் குழந்தைகளை அழிக்க நித்தி முயல்வார்.
அப்படி ஒரு முயற்சி நடந்தபோது எனது மகள் “உயிருக்கு ஆபத்து’ என பேசி வீடியோ வெளியிட்டார். அது வைரலானது. இந்தியா முழுவதும் ஊடகங்கள் அதை வெளியிட்டன.

அதை நான் எனது மகள் காணாமல் போன புகாரை விசாரிக்கும் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்ததால் எனது மகள்களை விட்டே மறுப்பு வெளியிட்டுள்ளார் நித்தி.

நித்தி இதுபோல ஏகப்பட்ட கிரிமினல் வேலைகளை செய்பவர். உண்மையில் எனது மகள்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பெரிய ஆபத்து உள்ளது’ என்கிறார் ஜனார்த்தன சர்மா.
Share.
Leave A Reply