உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் மது குடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு, அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உகான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (55). இவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை, இஸட்நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது குடிப்பது தொடர்பாக இருவருக்குமிடையே பந்தயம் நடந்தது.

202001211510124804_55yearold-man-dies-after-winning-liquor-drinking-contest_SECVPF.gif20 நிமிடத்திற்குள் யார் 4 குவாட்டர் பாட்டில்களை குடிக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். தோல்வி அடைபவர், இரண்டு பேருக்கான 8 குவார்டர் பாட்டில்களுக்கான விலையை கொடுக்க வேண்டும். ராஜேந்திர சிங்கின் மகன் தர்மேந்திரா உள்ளிட்ட 9 பேர் உடனிருந்தனர்.

ஆனால் போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் நான்கு குவாட்டர் பாட்டில்களை, தண்ணீர் உள்ளிட்ட எந்த பானமும் கலக்காமல் ராவாக குடித்து முடித்து பந்தயத்தில் வென்றார்.

இந்த உற்சாகத்துடன் தன் வீட்டிற்கு வந்து படுத்த ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

இதை கண்ட அவரது மகன், தந்தையை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை அழைத்தார்.

ஆனால் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வரும் முன்னரே ராஜேந்திர சிங் இறந்து விட்டார். இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

Share.
Leave A Reply