மகாராஷ்டிராவில் வீட்டுப்பாடத்தை முடிக்காத 3ஆம் வகுப்பு குழந்தைக்கு 450 தோப்புக்கரணங்கள் தண்டனை வழங்கிய பகுதி நேர ஆசிரியை மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள மிரா  வீதி பகுதியைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு சிறுமி  பகுதி நேர வகுப்புக்குக் கடந்த வெள்ளிக்கிழமையன்று  சென்று வந்துள்ளார்.

குறித்த சிறுமி மிகவும் சோர்வாகவும், கால்கள் வீங்கிய நிலையிலும் வீட்டிற்கு வந்ததையடுத்து பதறிப்போன பெற்றோர் சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

.
தோப்புக்கரணம்1வீட்டுப்பாடத்தை முழுமையாகச் செய்து முடிக்காததால் பகுதி நேர ஆசிரியை சிறுமியை 450 முறை உட்கார்ந்து எழுமாறு (தோப்புக்கரணம் போடுமாறு) தெரிவித்துள்ளார்.

இதனாலேயே குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்த பெற்றோர் குறித்த ஆசிரியை மீது பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாகப் பகுதி நேர ஆசிரியை  மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 324 மற்றும் சிறார் விதிகள் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்  குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply