திருமணம் முடிந்ததும் பிறந்த வீட்டிலிருந்து வெளியேற மறுத்த மணமகளை, மணமகன் அலேக்காக தூக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் திருமண முறைகள் பல்வேறு இடங்களில் மாறுபட்டாலும் கூட, திருமணத்திற்கு பின்னர் தான் பிறந்து வளர்ந்த அனைத்தையும் விட்டு மணப்பெண், மணமகனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது மட்டும் வழக்கமாகவே இருந்து வருகிறது.

இந்த நிகழ்வின் போது, எத்தகைய குணம் கொண்ட பெண்ணாக இருந்தாலும் கூட, தன்னுடைய தாய் உறவினர்கள் அனைவரையும் கட்டையனைத்து கதறி அழுதுவிடுவார். அவரை அங்கிருந்து தேற்றி அனுப்புவதற்கே நீண்ட நேரம் ஆகிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வடஇந்தியாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், திருமணம் முடிந்த பின்னர், பிறந்த வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என மணமகள் அடம்பிடிக்கிறார்.

அவரை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, இறுதியாக மணமகன் அவரை அலேக்காக தூக்கி செல்ல ஆரம்பித்துவிட்டார்.

இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள அந்த பக்கத்தின் நபர், மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதனை பார்த்த இணையதளவாசிகள், சிரிப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனை பார்த்து சிந்திக்க வேண்டும். இது ஒரு கடுமையான நிகழ்வு என கூறியுள்ளனர்.

Share.
Leave A Reply