13 வயதான வயது சிறுவனுக்கு நிர்வாணப் புகைப்படங்களையும் ஆபாசத் தகவல்களையும் அனுப்பியதுடன் அச்சிறுவனிடம் முறையற்ற விதமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் அமெரிக்கப் பாடசாலையொன்றின் ஆசிரியயான 24 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ரூமா பைரபகா எனும் இந்த யுவதி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
ஆமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் எப்சிபாவில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றினானர். விஞ்ஞானம் மற்றும் சமூகக் கல்விப் பாடங்களை இவர் கற்பித்து வந்தார்.
இந்நிலையில்இ அப்பாடசாலையின் மாணவனான 13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, தவறாக நடந்து கொண்டார் என ரூமா பைரபகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.அச்சிறுவனுக்கு ஆபாசத் தகவல்களை அனுப்பியதுடன்இ அவனை முத்துமிட்டு முறையற்ற விதமாக தொடர் எனவும் பிடிவிறாந்து ஆவனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 16 ஆம் திகதி ரூமா பைரபகாவை பொலிஸார் கைது செய்தனர். அமெரிக்க குடியுரிமை அல்லாத பைரபகா, காவலில் இருந்து விடுவிக்கப்பட்டால் குடியேற்றக் காவலில் ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் துன்புறுத்தல் மற்றும் அநாகரீகமான நோக்கங்களுக்காக ஒரு பிள்ளையை கவர்ந்திழுத்தல் உள்ளிட்டவைகளுக்காக அவர் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிணையில் செல்வதானால் 27,700 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூமா பைரபகா மாணவர் விசாவிலேயே அமெரிக்காவில் இருக்கிறார். இதன் விளைவாக நாடு கடத்தப்படுவதைஎதிர்கொள்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ஆசிரியை மீது காதல் வலையில் விழுந்து சிறுவன் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்க வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளான் என தெரியவந்து உளளது.