சேலம்: “அப்பா என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை வரும்போதெல்லாம் தொடராரு” என்று மகள் சொல்வதை கேட்டு பதறிவிட்டார் தாய்!

பாலியல் தொல்லை பெற்ற தகப்பன் மீது 11 வயது மகளே போலீசில் புகார் அளித்துள்ளார். சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்..

இவரது மகள் சந்திரா.. சேலம் அரசு மகளிர் கல்லூரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிகிறார். இவரது கணவர் ராஜேந்திரன்..

45 வயதாகிறது.. கரூர் அரசு கல்லூரியில், உடற்பயிற்சி இயக்குனராக வேலை பார்க்கிறார்.
கடந்த, 2006ல் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். ஆனால் 2 வருடத்துக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்துவிட்டனர்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 13 வயது மகள் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறார்.

women3343412-158003533711 வயது மகள் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த 11 வயது மகள், சேலம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு உறுப்பினர் தாமரை, சைல்டு லைன் உறுப்பினர் சிவசக்தி, மேலும் தன் தாயாரையும் அழைத்து கொண்டு ஆத்தூர் ஆத்தூர் மகளிர் போலீசில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், “தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா இல்லாத போது அப்பா என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொந்தரவுகள் செய்துவந்தார்.

வாரம் ஒருமுறை, என் லீவு நாட்களில் பாட்டி வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு தந்தார். இது குறித்து எனது தாயாரிடம் பலமுறை கூறினேன்.

என் அம்மா இதை நேற்று முன்தினம் நேரிலேயே பார்த்துவிட்டார். என் தந்தை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, ராஜேந்திரன் மீது, ‘போக்சோ’ வழக்கு பதிந்துள்ளனர். இதனிடையே சம்பந்தப்பட்ட உடற்கல்வி இயக்குனரை காணவில்லையாம்.. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

11 வயது மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் டார்ச்சர் தந்தது சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply