சீன யுவதி ஒருவர் வெளவால் சூப் உட்கொள்ளும் டுவிட்டர் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமைத்த முழு வெளவாலை யுவதியொருவர் உட்கொள்ளும் அந்தக் காட்சி சமீபத்தில் டுவிட்டரில் வெளியானது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் முதன்மை காரணங்களில் ஒன்றாக வெளவால்கள் கருதப்படுகின்றன, அவை முக்கியமாக சீனாவையும் வேறு சில நாடுகளையும் பாதித்துள்ளன.
இந்த வீடியோ சீனாவின் வுஹான் மாகாணத்தில் இனங்காணப்படாத உணவகமொன்றில் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சி அறிவிப்பாளரான வாங் மேங்காய் எனும் யுவதியே இந்த உணவை உட்கொண்டார்.
ஹொங்காங்கிலிருந்து இயங்கும் வலைத்தளமான அப்பிள் டெய்லி வெளிப்படுத்திய இந்த வீடியோ அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்து அதிர்வுகளை உருவாக்கியது.
இது குறித்து பின்னோட்டங்களில் எண்ணற்ற சமூக ஊடக பயணர்களின் கோபமாகக் தங்கள் எதிர்வினையைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வெளவாலை உட்கொண்டமைக்காக வாங் மேங்காய் மன்னிப்பு கோரியுள்ளார்.