சீனாவின் கொரனாவைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது ஒரே நாளில் மிகப்பெரிய பாய்ச்சலாக 38ஆல் இன்று உயர்ந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ள நிலையில், கொரனாவைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 170ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கு விஜயம் செய்ய வேண்டாம என தமது பிரஜைகளை பல அரசாங்கங்கள் வலியுறுத்தியுள்ளதுடன், சில நாடுகள் கொரனாவைரஸின் மய்யமான மத்திய சீன நகரஆன வுஹானுக்குச் செல்வதைத் தடுத்துள்ளன.

இதுவரையில் குறைந்தது 15 நாடுகள் கொரனாவைரஸ் தொற்றைக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளன.

gferwsaஅந்தவகையில், சீனாவிலிருந்து, சீனாவுக்கான விமான சேவைகளை நிறுத்த விமான சேவை நிறுவனங்கள் நேற்று ஆரம்பித்திருந்த நிலையில், இன்று மேலும் பல நிறுவனங்கள் தமது விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 38 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் இன்று தெரிவித்துள்ள நிலையில், இதில் ஒன்றைத் தவிர மற்றைய அனைத்து உயிரிழப்புகளும் வுஹான் தலைநகராகவுள்ள ஹுபெய் மாகாணத்திலேயே பதிவாகியிருந்தன.

இதேவேளை, கொரனாவைரஸால் தொற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,711ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொற்றுக்குள்ளாகியிருப்பர் என்ற சந்தேகத்தில் பிறிதொரு 81,000 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வுஹானிலிருந்து விமானம் மூலம் ஜப்பானும், ஐக்கிய அமெரிக்காவும் தமது பிரஜைகளை நேற்று  வெளியேற்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளை விமானம் மூலம் வெளியேற்றுவது குறித்து ஆராய்கின்றன.

இந்நிலையில், வுஹானிலிருந்து ஜப்பானைச் சென்றடைந்த முதலாவது விமானத்திலிருந்த மூவருக்கு கொரனாவைரஸ் காணப்பட்டதாக ஜப்பான் இன்று தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply