இலங்கையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கத்தாரிலிருந்து கடந்த வாரம் இலங்கை வந்த நபர்  காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரை, தெல்லிப்பாளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

கத்தாரில் சீனாவை சேர்ந்த ஒருவருடன் அறையில் விசித்து வந்ததால் அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

இதையடுத்து அவரை, யாழ்பாணத்தில் உள்ள போதனா மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், அந்த நபர் தெல்லிப்பாளை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் பீதியடைந்த மருத்துவர்கள் அவரை விரைந்து பிடிக்குமாறு போலுசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

தப்பியோடிய நபரிடமிருந்து வைரஸ்  தொற்று காட்டுத் தீ போல பரவ வாய்ப்புள்ளதால் இலங்கை மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த நபரின் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளும், போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply