சீனாவில், மாஸ்க் அணியாமல் வெளி வரும் மக்களை வானில் பறக்கும் ட்ரோன்கள் எச்சரித்து வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, மக்களை மாஸ்க் அணிந்து செல்லும் படி சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை கண்காணிக்க காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது சூப்பர் ஐடியா ஒன்றை கடைப்பிடித்து வரும் சீன காவல்துறையினர் வானில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் பொதுமக்களை கண்காணித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு போலீஸார் ட்ரோன் மூலம் அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், ”நான்தான் ட்ரோன். உங்களுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். மாஸ்க் அணியாமல் நீங்கள் சாலையில் நடந்துசெல்ல முடியாது.
நீங்கள், உங்கள் வீட்டுக்குத் திரும்புவதுதான் நல்லது. வீட்டுக்குச் சென்றதும் கைகளை சுத்தமாகக் கழுவுவதற்கு மறவாதீர்கள். மக்களை வீட்டுக்குள்ளே இருக்க அறிவுறுத்தியுள்ளோம்.
நீங்கள் வெளியில் செல்கிறீர்கள். ட்ரோன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. என மூதாட்டி ஒருவரிடம் பேசுகிறார்கள்.
அதேபோல், போக்குவரத்து போலீஸார் சாலையில் செல்பவர்களைக் கண்காணிக்கும் வீடியோவும் இடம்பெற்றுள்ளது.
அதில் பெண் போலீஸார் ஒருவர், “உங்கள் மாஸ்க் எங்கே, மாஸ்க்கை கட்டாயம் அணியுங்கள். போனில் பேசிக்கொண்டிருக்கும் அழகான இளைஞரே, மாஸ்க் எங்கே? மாஸ்க்கை அணியுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.
Walking around without a protective face mask? Well, you can’t avoid these sharp-tongued drones! Many village and cities in China are using drones equipped with speakers to patrol during the #coronavirus outbreak. pic.twitter.com/ILbLmlkL9R
— Global Times (@globaltimesnews) January 31, 2020