வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற இளம் தாய் மரணமடைந்ததுடன் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பின்புறமாக நோக்கி செலுத்தியுள்ளார்.

இதன் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வேகமாக பின்புறமாக நோக்கிசென்று வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இரு துவிச்சக்கர வண்டியுடன் மோதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் வேலியையும் சோதமாக்கியது.

DSC_0160_2

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற இளம் தாய் உட்பட பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படு காயமடைந்த நிலையில்   வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதன் போது ச. புஸ்பராணி வயது 36 என்ற 3 பிள்ளைகளின் தாய் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply