முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகிலிருந்து இன்று (06) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயா என்பவரே சுடடுக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply