சிறுவனை அழைத்து தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை கழற்ற சொன்னதால் சர்ச்சை எழுந்துள்ளதுடன் அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து அமைச்சர் கழற்றச் சொன்னார்.

‘டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா’ என அமைச்சர் கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினார்.

அதேபோல், அதிகாரி ஒருவரும் அதற்கு உதவினார். இந்த சம்பவம் நடந்த போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா, அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Share.
Leave A Reply