சீனாவிலிருந்து பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்க் காரணமாக உயிரிழந்தோர் தொகை 719 ஆக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 80 மரணங்கள் பதிவாகியுள்ளனவெனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 34, 377 பேருக்கு இந்த நோய் தொற்றியுள்ளதோடு, அவர்களில் 1871 பேர் காப்பாற்றபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ​குறித்த நோய் தெற்றியிருக்க முடியுமென சந்தேகிக்கப்படும் பெண்னொருவர் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டு அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாடாளாவிய ரீதியில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்க முடியுமென கருதப்படும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply