மழையை பெய்விக்கிறது ஒரு கை, மற்றொரு கை தெய்வ மகளுக்கு மணமாலை சூட்டுகிறது. பன்னிரு திருக்கரங்களும் ஆறு முகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
* விண் உலகம் செல்லும் துறவிகளுக்கு பாதுகாவலாக ஒரு கை. அதற்கு இணையாக மற்றொரு கை மருங்கிலே அமைந்துள்ளது.
* ஒரு கை குரங்கின் மேல் கிடக்க, மற்றொரு கை அங்குசத்தை செலுத்துகிறது.
* ஒரு கை அழகிய பரிசையும், மற்றொரு கை படையையும் வலமாக சுற்றுகிறது. வேள்வி செய்பவர்களுக்கு இடையூறாக வரும் தீய சக்திகளை இக்கரங்கள் தடுக்கின்றன.
* ஒரு கை மார்போடு விளங்க, அமைதியின் அறிகுறியான மற்றொரு கை மோன முத்திரை காட்டி நிற்கிறது.
* ஒரு கை தொழ நழுவும்படி மேலே சுழன்று கள வேள்விக்கு முத்திரை கொடுக்க, மற்றொரு கை மணியை ஒலிக்கிறது. வேள்விகளை பாதுகாக்கும் திருமுக செயலுக்கு இக்கைகளின் செயல் பொருத்தமாக அமைந்துள்ளன.
* மழையை பெய்விக்கிறது ஒரு கை, மற்றொரு கை தெய்வ மகளுக்கு மணமாலை சூட்டுகிறது. பன்னிரு திருக்கரங்களும் ஆறு முகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.