இந்நிலையில் துவிச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றவர் சிகிச்சை பலனின்றி இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் சல்லி-சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த துவிச்சக்கரவண்டி சாரதியான விஜயானந்தன் ஜெசூதன் (26வயது) எனவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை முச்சக்கர வண்டி சாரதியான அதே இடத்தைச் சேர்ந்த சித்திரவேல் கேதீஸன் (25வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
திருகோணமலை நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை – சாம்பல் தீவு பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.