உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனர்களை கருணை கொலை செய்ய சீனா தயாராகி வருவதாக சீனாவிலிருந்து நாடு திரும்பியுள்ள இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சுமார் 25 நாடுகளில் பரவியுள்ளது.
குறித்த வைரஸின் தாக்கம் சீனாவில் கடுமையாக உள்ளதால் அங்கிருக்கும் 20000 கொரோனா நோயாளர்களை சீனா கருணை கொலை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.
அதன்படி இந்தியாவிற்கு திரும்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சீனாவில் பணிபுரியும் கேசவன் குறித்த கருணை கொலை தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் தற்போதைய நிலை குறித்து அவர் தெரிவிக்கையில்,
சீனாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு தொழில் மற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு 2 மாதங்களாக பலரை பலி கொண்டுள்ளது.
இப்போது வரை அங்கிருக்கும் அனைத்து இடங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து உணவகங்களுக்கும் அந்த நாட்டு அரசின் மறு அறிவிப்பு வரும் வரை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசா காலம் முடிந்தும் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேற வழி தெரியாமல் உள்ளனர்.
இந்திய தூதரகமும் கைவிரித்து விட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள், சீனா தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினால் கூட பரவாயில்லை எனக்கூறி அங்கேயே உள்ளனர்.
அனைவரையும் காப்பாற்றி மத்திய அரசு இந்தியா அழைத்து வர முன்வர வேண்டும். ஹொங்ஹொங், மக்காவ் போன்ற அண்டை நாடுகள் தங்களது எல்லையை மூடிவிட்டன.
சீனாவில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சீனாவில் ரயில், விமான சேவை பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
பாடசாலைகள், கல்லூரிகள் அனைத்தும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து விதமான அசைவ உணவுகளையும் இருப்பு வைக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கிட்டத்தட்ட 20000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கருணை கொலை செய்யும் அளவுக்கு நோயின் தாக்கம் சீனாவில் கடுமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, போலி மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல், நோய் தொடர்பிலான வதந்திகளை பரப்புதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வேட்டை மற்றும், அசைவ உணவு வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றிலும் சீனாவில் பல விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் அல்லது கொரோனா வைரஸ் அறிகுறிகளை மறைப்பவர்கள், முக்கிய வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பயணம் செய்தவர்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட சந்தர்ப்பங்கள் ஆகியவை சட்ட ரீதியில் அணுகப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் நேற்றைய தினம் மேலும் 2,656 புதிய கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சீனா நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.