ஓடுபாதையில் இருந்து ஒரு விமானம் மேல் எழும்பி பறக்கத் தொடங்கிய சில விநாடிகள் இடைவெளியில் மற்றொரு விமானம் தரையிறங்கிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ள 52 விநாடிகள் உடைய அந்த வீடியோவில், ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடத்தயராகும் நேரத்தில் மற்றொரு விமானம் அப்பகுதியில் பறக்கிறது.
அதன் பின், அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பி பறக்கத் தொடங்கியதும் மற்றொரு விமானம் தரையிறங்கியது.
அந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் இன்னும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.