சேவ சண்டை பாத்து இருப்பீங்க, நாயும்-நாயும் சண்டை போட்டு பாத்து இருப்பீங்க. ஆனா ஒரு சேவல் ரெண்டு நாய்களை ஓடவிட்டு பாத்து இருக்கீங்களா? இல்லனா இந்த வீடியோவை கட்டாயம் பாருங்க. சத்தம் போட்டு சிரிக்குற அளவுக்கு ஜாலியா இருக்கும்.
வீடியோவில் இரண்டு நாய்கள் இருக்க, அதில் ஒரு நாய் சேவலின் ஸ்நாக்ஸை எடுத்து சாப்பிடுகிறது.
பதிலுக்கு சேவல் கொத்த, இன்னொரு நாய் சேவலுடன் சண்டைக்கு போகிறது. இதனால் கடுப்பாகும் சேவல் அந்த நாயை சண்டை போட்டு, கொத்தி உண்டு-இல்லை என ஒருவழி பண்ணி விடுகிறது.
Came across in Whatsapp ! pic.twitter.com/BgrUPZ5vyz
— T Muruganandham (@muruga_TNIE) February 11, 2020
சேவலின் சண்டையை பார்த்து பயந்து போன நாய்கள் இரண்டும் ஊரைவிட்டு ஓட, சேவலும் சளைக்காமல் பின்னாலேயே ஓடி சண்டை போட்டு அந்த நாயை வச்சு செய்கிறது.
வாட்ஸ் அப்பில் வந்த இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் பகிர, வீடியோ பார்த்த அனைவரும் ஜாலியாக சிரித்து லைக் செய்து வருகின்றனர்.