பேவோட்ச் புகழ் நடிகையான பமேலா அண்டர்சனின் 5 ஆவது திருமண வாழ்க்கை 12 நாட்களில் முடிவடைந்துள்ளது.

54 வயதான நடிகை பமேலா அண்டர்சனுக்கும் 74 வயதான ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளர்  ஜோன் பீட்டர்ஸுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள மாலிபு நகரில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

1989 ஆம் ஆண்டில் பமேலாவும் ஜோன் பீட்டர்ஸும் காதலித்த போதிலும் அவர்கள் பின்னர் பிரிந்தனர். 30 வருடங்களின் பின்னர் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இடைப்பட்ட காலத்தில் 4 பேரை பமேலா அண்டர்சன் திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலில், இசைக் கலைஞர் டொமி லீ என்பவரை 1995 ஆம் ஆண்டு பமேலா அண்டர்சன் காதலித்து திருமணம் செய்தார். 1998 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

flat750x075f-pad750x1000f8f8f8

2006ம் ஆண்டு கிட் ரொக் என்ற பாடகரை பமேலா திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்க்கையும் 2007-ம் ஆண்டு விவாகரத்தில் முடிவடைந்தது.2007 ஆம் ஆண்டு ரிக் சொலமன் எனும் விளையாட்டு வீரரை பமேலா அண்டர்சன் திருமணம் செய்தார்.

ஒரு வருடத்தில் இவர்கள் பிரிந்தனர். ஆனால், 2014-ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 2015 ஆம் அண்டில் இவர்கள் விவாரத்துப் பெற்றனர்.

2017 முதல் 2019 ஆம் ஆண்டுவரை கால்பந்தாட்ட வீரர் ஆதில் ரெமி என்பவருடன் பமேலா இணைந்து வாழ்ந்தார்.

இறுதியாக ஜோன் பீட்டர்ஸும் பமேலா அண்டர்சனும் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி திருமணம் செய்தனர்.

இத் திருமணம் குறித்து பமேலா அண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.

எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

uztrewஆனால், 12 நாட்களில் இத்திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.ஜோன் பீட்டர்ஸை திருமணம் செய்து ஒன்றரை நாட்களிலேயே தான் தவறு செய்துவிட்டதாக உணர்ந்ததாக பமேலா அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

hzrew

பீட்டர்ஸ் தன்னை மிகவும் கட்டுப்படுத்துவதாக பமேலா கூறினார்.இதேவேளை, பமேலா அண்டர்சனை பிரிவதற்கு முன்னர் அவர் சில கடன்களை அடைக்க முடியாமல் சிரமப்படுவதை உணர்ந்து அவரின் 2 இலட்சம் டொலர் கடனை தான் செலுத்தியதாக ஜோன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார் .

Share.
Leave A Reply