தனது தோழிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு தேடி தற்போது இந்த 9 ஏக்கர் வீட்டை வாங்கியுள்ளார் அமேஸான் ஓனர் ஜெஃப் பீசோஸ்.

DJI_0013-2

1930-ம் ஆண்டில் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களான வார்னர் சகோதரர்களுக்காக இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த வீட்டைத்தான் பீசோஸ் தனது பெண் தோழிக்காக வாங்கியுள்ளார்.

002880916

இந்த வீடு இருக்கும் பகுதியை மேலிருந்து பார்க்கையில் ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடியில் பச்சை பசேலென விரிந்திருக்கும் அடர்ந்த கானகம் போன்று காட்சி அளிக்கிறது.

இந்த வீட்டில், இரண்டு விருந்தினர் மாளிகைகள், ஒன்பது ஹோல் கோல்ஃப் மைதானம், 3 கண்ணாடி மாளிகைத் தோட்டங்கள், மாபெரும் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள், 6 பெரும் வாகன நிறுத்துமிடங்கள், 7 மாளிகைகளுக்கு நிகரான 7 படுக்கறைகள் என பிரமாண்டத்தின் உச்சமாக ஜெஃப் பீசோஸின் வீடு இருக்கிறது .

தோழிக்காக வாங்கியுள்ள இந்த வீட்டின் இந்திய மதிப்பு 1,177 கோடி என்று கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply