சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாண, மாதகல் கடல் பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட தங்கத்தின் நிறை 14.35 கிலோகிராம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற விடயத்தை கடற்படையினர் இன்னும் வெளியிடவில்லை.

 

gold_kidnaped_jaffna_03gold_kidnaped_jaffna_04gold_kidnaped_jaffna_05

Share.
Leave A Reply