கொளத்தூர் அருகே மளிகைக்கடையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் மர்மநபர் நகையை பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நகை அறுபடாததால், மூதாட்டியை தரதரவென இழுத்து நகையை பறித்துள்ளார். பின்னர் தயாராக நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் கொள்ளையனை பிடிக்க துரத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இவை அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மளிகைக்கடையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் வழிப்பறி நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.