தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது.

பாகுபலி ஜோடியான பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் கிசுகிசு உலவி வருகிறது.

நாங்கள் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் பலமுறை கூறிவிட்டாலும் ரசிகர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.

அவர்கள் ஒருபடிமேலே சென்று இருவர் பெயரையும் இணைத்து. ‘பிரனுஷக்கா’ என குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய தகவல் பரவி வருகிறது.

அதாவது அனுஷ்கா வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங்கில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

202002161751084315_1_anushk34._L_styvpf

அவரைத்தான் அனுஷ்கா மணக்க இருப்பதாகவும் திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஒருவரை நடிகை மணப்பதென்பது ஏற்கனவே நடந்திருக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த காதல் கிசுகிசு உண்மையாக இருக்குமா என்று கேட்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் அனுஷ்கா இதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றார்.

Share.
Leave A Reply