மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி,  கிரான் சந்தியில் லொறி ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பம்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்ததுடன் இருவார் படுகாயமடைந்துள்ளனர்.

 IMG-20200216-WA0006

இன்று (16)  காலை11 மணியளவில்,  கிரான் சந்தியில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின்  சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய  மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது  மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஏனைய இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்  தெரிவித்தனர்.

IMG-20200216-WA0001__1_

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கிரான் காளி கோவில் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய  ரங்கன் ராமசாமியும் அவருடைய மகனான  41 வயதுடைய ராமசாமி விஜயபாஸ்கர், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின்  சாரதியை கைது செய்துள்ள  ஏறாவூர் பொலிஸார்  விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply