யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இன்று (17) நண்பகல் புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

20200217_114845_resize_24

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சாரதி உயிர்த்தப்பியதோடு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply